Skip to main content

'தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது'!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

tamilnadu +2 exams results students tn govt

 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இணையத்தளத்தில் வெளியிட்டது தமிழக அரசு.


அதன்படி, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 94.80%, மாணவர்கள் 89.41 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 5.39% மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 97.12% தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 96.99% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 96.39% தேர்ச்சியுடன் கோவை மூன்றாவது இடத்தையும் பிடித்தது. பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் மாணவ, மாணவிகள் அறிந்துகொள்ளலாம். 

 

இன்று (16/07/2020) காலை 09.30 மணிக்கு மாணவ, மாணவிகள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம். தமிழகத்தில் உள்ள 7,127 பள்ளிகளில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகள் 94.30 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மெட்ரிக் பள்ளிகளில் 98.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில் 95.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியலில் 95.82 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 96.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியலில் 93.95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விலங்கியலில் 92.97% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியலில் 96.14% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 99.51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியலில் 95.65% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதிய 62 கைதிகளில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்