பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. பள்ளிகளிலும், தனியாகவும் சேர்த்து மொத்தம் 9,33,690 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 92 புள்ளி ஒரு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிடப் புள்ளி 7 சதவீதம் கூடுதலாகும். வழக்கம் போலவே மாணவிகள், மாணவர்களை விட 5.2 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படுகிறது.