Skip to main content

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவு

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

 


தமிழகத்தில் நிலவக்கூடிய வருவாய் உதவியாளர் உத்தேச காலிப் பணியிடங்கள் குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நேரடி நியமனம் மூலம் நியமிக்கக்கூடிய இடங்களில் 91 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் கோரப்பட்டுள்ளது. 

 

t


இந்த வகையிலான காலிப் பணியிடங்கள் அதிகபட்சம் சென்னை மாவட்டத்தில் 31 இடங்களும், திருவண்ணாமலை, வேலூரில் முறையே 18, 25 இடங்களும் உள்ளன.    இந்த ஆண்டில் பதவி உயர்வின் மூலம் நிரப்பக்கூடிய 1,384 வருவாய் உதவியாளர் காலிப் பணியிடங்கள் இருப்பதாக உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 167 இடங்களும், அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 109 இடங்களும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்