ஒரு பிரச்சனை என்றால் ஆளுநரிடம் கொண்டு மனு கொடுக்கும் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் ஆய்வுகளை எதிர்க்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழக ஆளுநருக்கும், பிரதமர் மோடிக்கும் கருப்புக் கொடி காட்டியது போல, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை நியமிக்காத கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும் கருப்புக் கொடி காட்டுவீர்களா?
கறுப்பு பலூன்களை பறக்க விட்டீர்கள் இன்று அதையெல்லாம் திரும்ப பெறுவீர்களா? காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் குமாரசாமியும், காங்கிரசும் தான் உறுப்பினர்களை கொடுக்கவில்லை. இதற்கு என்ன சொல்ல போகிறார்? ஆக உங்கள் போராட்டங்கள் எல்லாமே வெற்றுப்போராட்டங்கள்.
மு.க.ஸ்டாலின் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஆளுநரிடம் கொண்டு மனு கொடுக்கிறார். ஆனால் ஆளுநர் ஆய்வு செய்தால் உடனே அதற்கு கறுப்புகொடி காட்டுகிறார். போரட்டத்திற்கு அனுமதி இல்லாத இடத்தில் போராடினால் கைது செய்வது சரியான நடவடிக்கை தானே என அவர் கூறியுள்ளார்.