தமிழ்நாடு அனைத்துவளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் போராட்டம்
தமிழ்நாடு அனைத்துவளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் 1000 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிக்கு பணிமாறுதல் செய்தல் வேண்டும், மாவட்ட அளவில் ‘0’ கலந்தாய்வு நடத்திட வேண்டும், 2014-ல், மாவட்டம் உபரியால் பாதிக்கப்பட்ட (2009-10) ஆசிரியர் பயிற்றுநர்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்புதல் வேண்டும், பணியில் சேர்ந்ததுமுதல் பிற மாவட்டங்களில் பணியாற்றிவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (250 நபர்கள்) மாநில கலந்தாய்வு நடத்துதல், FTA 4000 ரூபாயாக உயர்த்துதல் வேண்டும், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும், BRC-க்கு ஒரு ஜீப் அல்லது கார் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைத்தனர்.
-அசோக்குமார்