Skip to main content

"உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும்"- வெளியுறவுத்துறை அமைச்சரிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல்!

Published on 28/02/2022 | Edited on 28/02/2022

 

"Tamil Nadu students in Ukraine should be released soon" - Tamil Nadu Chief Minister urges Foreign Minister!

 

உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (28/02/2022) தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இன்று (28/02/2022) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.

 

அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வதோடு விரைவில், அவர்களை மீட்டுக்கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், இதற்கென தனி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதெனவும், விரைவில் அவர்கள் மீட்டுக் கொண்டு வரப்படுவார்கள் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  உறுதியளித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்