Published on 17/03/2023 | Edited on 17/03/2023
அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்த் என்ற ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தேனியை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தமிழக அரசு சார்பில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அறிவுறுத்தியுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளதோடு ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.