Published on 13/11/2020 | Edited on 13/11/2020
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ் மீது பாசமாக இருப்பது போல் போட்ட பா.ஜ.க.வின் வேஷம் கலைந்துவிட்டது தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க கடும் நிபந்தனைகளை மத்திய அரசு விதிப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே தமிழ் கற்பிக்க உத்தரவிட வேண்டும். தமிழ் மொழியை மட்டும் சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமையல் எரிவாயு முன்பதிவில் தமிழை முதலிடத்தில் இடம் பெற செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். அரசுப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமித்து தமிழ் வகுப்புகள் நடத்த வேண்டும்.' என கோரிக்கை விடுத்துள்ளார்.