தமிழக - கேரளா எல்லையில் 10 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
தமிழக - கேரளா எல்லையான அமரவிளையில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை கடத்திய பிரவீன், ராஜேஷ் ஆகிய இருவரைக் கைது செய்து கேரளா போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாகர்கோவில் - திருவனந்தபுரம் அரசுப்பேருந்தில் இருவரும் கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றபோது போலீசில் பிடிபட்டனர்.