வேலூர் சிப்பாய் புரட்சியின் 217 ஆம் ஆண்டு நினைவாக மே 17 இயக்கம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பேராசிரியர் சுந்தரவள்ளி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் திருமுருகன் காந்தி பேசுகையில், “அன்றைக்கு வேலூர் கோட்டையில் ஆங்கிலேயன் கொடுத்த குள்ளாவும், இன்றைக்கு பாஜக கொண்டு வரும் பொது சிவில் சட்டமும் ஒன்று. வேலூர் கோட்டையில் உள்ள மசூதியை தமிழக அரசு திறக்க வேண்டும். இது நமது பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வரலாறு. மோடி பாராளுமன்றத்தை மூடி வைத்துள்ளது போல், வேலூர் கோட்டையில் உள்ள மசூதியையும் மூடிவைத்துள்ளார்கள். பாஜக கொடியை தமிழகத்தில் பார்க்கும் போதெல்லாம் மலத்தை மிதிப்பது போல் உள்ளது. சாதிகளின் அடையாளங்களாக மாற்றி வைத்துள்ளார்கள். இதே போல ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டில் தீரன் சின்னமலை கூட்டம் நடத்துவோம். நாங்கள் கூட்டம் நடத்த எங்களுக்கு காவல் துறை அனுமதி மறுக்கிறது.
இன்னும் இந்த காவல் துறை வெள்ளையனின் காவல் துறையாக உள்ளதா? கோட்டையில் இன்னும் வெள்ளையன் உள்ளனவா என நினைக்கத் தோன்றுகிறது. மே17 இயக்கம் இருக்கும் வரை பாஜக வேலூரை கைப்பற்ற முடியாது” என்றார்.