Skip to main content

'குடி நோயாளிகளைத் தமிழக அரசு உருவாக்கி வைத்துள்ளது' - அன்புமணி ராமதாஸ் காட்டம்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
'Tamil Nadu government has created drunken patients' - Anbumani Ramadoss Kattam

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''இந்த கள்ளச்சாராய சாவு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இதில் தொடர்பு உள்ளவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதனால் உறுதியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கிறோம். இதை ஒரு சம்பவமாக பார்க்க கூடாது. எதற்காக இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்றால் இது போன்ற சம்பவங்களுக்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள்; இதில் தொடர்புடையவர்கள் யார்; கடந்த 20 ஆண்டு காலமாக யார் யார் இது போன்ற கள்ளச்சாராய சம்பவங்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள்; யார் இவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது; எங்கிருந்து கள்ளச்சாராயம் வருகிறது; எங்கே போகிறது; வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது அதற்காக சிபிஐ விசாரணை வேண்டும்.

சிபிசிஐடி-ஐ மதிக்கிறவன் நான். அதைத் தப்பு சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு இவர்கள் பிரஷர் கொடுப்பார்கள். இதில் அமைச்சர்களுக்கு, மாவட்டச் செயலாளர்களுக்கு தொடர்புள்ளது. அவர்கள் பிரஷர் கொடுப்பார்கள். அது நேர்மையாக நடக்காது. உண்மையாக நடக்காது. கண் துடைப்புக்காக பத்து பேரை கைது செய்வார்கள். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. அதற்கு முதலில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடையை முடிந்த அளவு கொஞ்சம் கொஞ்சமாக மூடுங்க.

nn

குடி நோயாளிகளை தமிழக அரசு உருவாக்கி வைத்துள்ளது. மது இல்லாமல் அவர்கள் உயிர் வாழ முடியாது என்ற நிலைக்கு மக்களை தள்ளியுள்ளார். 150 ரூபாய்க்கு பதிலாக இங்கு போய் 50 ரூபாய்க்கும் 60  ரூபாய்க்கும் குடித்துவிட்டு சாகிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பையன் சொல்கிறான் காலை 4:30 மணிக்கு எழுந்தவுடன் குடிப்பானாம். அவனுக்கு வயது 21. இன்னைக்கு அவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். காலையில் 4.30 மணிக்கு எழுந்தவுடன் முதலில் குடிப்பேன் என்று சொல்கிறான். இதுதான் திராவிடம். ஆறு வருடமாக குடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறான். 15 வயதிலிருந்து குடிப்பது என்றால் என்ன நிலைக்கு தமிழ்நாடு போகின்றது என்று பாருங்கள்.

டாஸ்மாக் கடையின் பார் எல்லாவற்றையும் திமுக கட்சிக்காரர்கள் நடத்துறாங்க.பாரில் 24 மணி நேரமும் டாஸ்மாக் சரக்கு கிடைக்கிறது. உங்களுடைய நிறுவனர் அண்ணா எத்தனை முறை சொன்னார் 'மதுவால் வருகின்ற வருமானம் குஷ்டரோகி கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது; அது ஒரு பொழுதும் எனக்கு வேண்டாம்' எனத் திமுக நிறுவனர் அண்ணா சொன்ன பிறகும் இவர்கள் அதைத் திணிக்கிறார்கள். விற்கவில்லை இவர்கள் திணிக்கிறார்கள். செந்தில் பாலாஜி உள்ளே இருக்கிறார். அவர் இருந்தால் இந்நேரம் 70 ஆயிரம் கோடிக்கு போய் இருக்கும் தமிழ்நாட்டில் மது விற்பனை. இப்பொழுது 55,000 கோடி தான் இருக்கிறது''என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படிப் பேசுவது நியாயமல்ல” - அன்புமணி ராமதாஸ்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Anbumani Ramadoss says It is not fair for a senior minister like Duraimurugan to talk like this

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையைக் காட்டுகிறது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை, டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின்  கருத்துகள் காட்டுகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற தி.மு.க அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. 

அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தைத் தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என  வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.

அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளைத் தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியைச் சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம்'-முதல்வர் அறிவிப்பு

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
'Amendment on Enforcement of Liquor Prohibition' - Notification by the Chief Minister

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதிலளித்து தமிழக முதல்வர் பேசுகையில், ''கள்ளக்குறிச்சி விவகாரம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பல்வேறு அலுவல்களில் இது குறித்து பேசி வருகிறோம். இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கதுறையின் திருத்தச் சட்ட மசோதா நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்' என தெரிவித்துள்ளார்.