திருச்சியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டம் திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் பேசும் போது…
நடந்துமுடிந்த எம்.பி. தேர்தல் முடிவுகள் கமல்,அன்புமணி, விஜயகாந்த உள்ளிட்டோரின் முதல்வர் பதவி கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. இதன் மூலம் சட்டசபை தேர்தலுக்கான ரோடு காலியாக உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தான் சென்று கொண்டிருக்கிறார். எந்த கட்சியும் இல்லை. அதிமுகவுக்குள் யார் தலைவர் என்று இபிஎஸ்,ஓபிஎஸ் இருவருடையே சண்டை ஆரம்பித்து விட்டது. இந்த ஆட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஸ்டாலினுக்கு விரும்பம் இல்லை. 2 ஆண்டுகள் இந்த ஆட்சி முடிவுக்கு வந்தாலும், இடையில் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு முடிவுக்கு வந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் முதல்வர் ஆவார்.
மோடி 2 வது முறையாக பிரதமர் ஆகிவிட்டார் என்பதால் அவருக்கு நாட்டையே எழுதிக்கொடுத்தாதக அர்த்தமில்லை. இதற்கு முன்பு நேரு, இந்திரா, ராஜீவ், மன்மோகன் என பலரும் பலமுறை பிரதமராக இருந்துள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலின் முதல்வர் ஆவார். அடுத்த 3 ஆண்டுகளில் வரும் எம்.பி. தேர்தலில் ராகுல்காந்தி பிரதமர் ஆவர்.