Published on 06/12/2021 | Edited on 06/12/2021

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (06/12/2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய இரண்டு பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வின்போது, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு இ.கா.ப., சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.