திண்டுக்கல் நகர மக்கள் மீது 200 சதவீதம் வரி உயர்வை செய்த மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கு சதுர அடிக்கு இவ்வளவு என வரி விதிக்க நிர்வாகம் உத்தேசித்துள்ளது. பிறப்பு இறப்பு சான்றிதழுக்கு ரூ.100 முதல் ரூ.600 வரை கட்டணம் நிர்ணயித்து உள்ளது. வீடுகளில் சேகாரமாகும் குப்பைகளுக்கு வரிவிதித்துள்ளது. குடிநீர் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதே போல் குடிநீர் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக செவ்வாயன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் பி.ஆசாத் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி. மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.