Skip to main content

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு - தமிழக முதல்வர் உத்தரவு! 

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

Committee-Tamil Nadu Chief Minister instructed to study the effects of NEET selection!

 

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய நீதியரசர் தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

 

நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ''சமூகநீதியை நிலைநாட்டும் கடமை தமிழக அரசுக்கு எப்போதும் உண்டு. எனவே நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை சரி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் இந்தக் குழு ஆய்வு செய்யும். இதன் மூலம் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பை அகற்ற தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்'' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்