Skip to main content

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா ?

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவசமாக தமிழக மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் "காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை" "தொலைந்து விட்டாலோ" அல்லது "அட்டை உடைந்து விட்டாலோ" கவலை வேண்டும். மிக எளிதாக காப்பீட்டு அடையாள அட்டையை இணையதளம் மூலமாக எடுக்கலாம். காப்பீட்டின் அடையாள அட்டையின் எண் இருந்தால் கூட போதும். இதை சமந்தப்பட்ட மருத்துவமனையில் கொடுத்தால் உடனடியாக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கான இணைய தள முகவரி : https://www.cmchistn.com/. இந்த இணையதளத்தை பயன்படுத்தி குடும்ப அட்டையின் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்தாலே போதும். ஏற்கெனவே தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருந்தால் காப்பீட்டு எண் மற்றும் குடும்ப தலைவர் , உறுப்பினர்கள் பெயர்கள் இடம் பெறும். இதை பதிவிறக்கம் செய்து சமந்தப்பட்ட மருத்துவமனைகளில் கொடுத்தால் ஏற்றுக்கொள்வார்கள். 

health insurance

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : 1800-425-3993 . மேலும் இந்த இணைய தளத்தில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகள் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர் என்பதையும் அறியலாம். இதனை தொடர்ந்து எந்த வகையான சிகிச்சைகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் பயன்படும் என்பதையும் இதே இணையதளத்தில் அறியலாம்.  முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திடன் பிரதமர் காப்பீட்டு திட்டம் இணைந்ததால் ஆண்டுக்கு ரூபாய் 5லட்சம் வரை ஒரு குடும்பம் மருத்துவ சேவையை முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 75% அறுவை சிகிச்சைக்களுக்கு இந்த காப்பீட்டு திட்டம் பயன்படும். உதாரணமாக "Heart Attack Operation " நிறைய மருத்துவமனைகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி ?

விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணையாத குடும்பங்கள் தாங்கள் வசிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு திட்டத்திற்கென்று தனி அலுவலகம் உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை பெற்று குடும்ப அட்டையின் நகல் , குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல் உள்ளிட்டவை விண்ணப்பத்துடன் இணைத்து குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு வரும் அங்கு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும். இதன் பின்பு அலுவலகத்தின் அதிகாரி " Acknowledgement Receipts" தருவார். பின் குறிப்பிட்ட நாட்கள் கழித்து மீண்டும் அதே அலுவலகத்திற்கு சென்று காப்பீட்டு அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இந்த இணையதளத்தை அனைத்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டாயம் நினைவில் வைத்திருந்தால் கிராம மக்களுக்கு எளிதில் இந்த திட்டத்தை கொண்டு செல்ல முடியும். அனைத்து மக்களுக்கும் தரமான சிகிச்சை கிடைக்க வழி செய்யும்.

 

பி. சந்தோஷ் , சேலம்  

சார்ந்த செய்திகள்