தமிழக சட்டசபை வரும் மே 29ம் தேதி காலை 10.39 மணிக்கு கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன் அறிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டமன்றம் கூடுகிறது. துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதம் மே 29-ல் துவங்கி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மானிய கோரிக்கை தொடர்பாக துறை ரீதியிலான ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையை விரைவாக கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவிரி விவகாரம், நீட் தேர்வு குளறுபடிகள், அரசு ஊழியர்கள் போராட்டம், குட்கா விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.