அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் மேலும் நெல்லை, நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி, திண்டுக்கல் என ஆறு மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இதனால் மலை மாவட்டமான நீலகிரி வால்பாறை மற்றும் கோவையின் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் தேனி, திண்டுக்கல், நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.