



வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து இன்று, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நா.கமல் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.சக்தி சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாண்டியன்(GH), மாவட்ட மாணவரணி செயலாளர் க. திலீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மு.ஆனந்த முனிராசன், நகரச் செயலாளர் த.கருணாநிதி, இரா.நாராயணன் தி.தொ.க. பேரவைத் தலைவர் அ.மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மண்டல தலைவர் மு.நாகராஜன், சி.மாரியப்பன், இரா. ஜெயப்பிரகாஷ், மாணிக்கம், சின்னப்பர், பாண்டி, சிதம்பரம், காஞ்சித்துரை பெரியார் சுந்தர், அஜித், பாலமுருகன், ஜெகநாதன், கீர்த்தீஸ்வரன், வின்சென்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.