Skip to main content

“தமிழக - கர்நாடக அணைகளை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்” - அன்புமணி பேட்டி

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

'Tamil and Karnataka dams should be handed over to the commission' - Anbumani interview

 

'தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அணைகளும் சரி கர்நாடகாவில் இருக்கக்கூடிய அணைகள் எல்லாமே காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

 

செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “அணைகளின் கட்டுப்பாடு கர்நாடக அரசிடம் இருக்கிறது. அதுவே தவறானது. ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் இந்த மாநிலங்களில் உள்ள அணைகளுடைய கட்டுப்பாடு அங்கு இருக்கக்கூடிய மேலாண்மை ஆணையத்திடம் இருக்கிறது. இந்த மாநிலத்திற்கு என்ன தேவை, இந்த மாநிலத்திற்கு என்ன தேவை, எப்பப்ப தேவை என்று முடிவு எடுத்து தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் இங்கு (கர்நாடகாவில்) நாம் அவர்களிடம் கேட்கத்தான் முடியும். காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு இருக்கிறது. அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. காவிரி மேலாண்மை ஆணையம் இருக்கிறது. அவர்களுக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. திறந்து விட வேண்டும் என சொல்லலாம் அவ்வளவுதான். அவர்கள் திறக்கவில்லை என்றால் எதுவுமே செய்ய முடியாது.

 

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அணைகளும் சரி கர்நாடகாவில் இருக்கக்கூடிய அணைகள் எல்லாமே காவிரி மேலாண்மை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் எப்பொழுது நீர் திறக்க வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு என்ன 177.25 டிஎம்சி நீர் ஆண்டுக்கு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். அந்த தீர்ப்பின்படி இந்த மாதத்தில் செப்டம்பர் எட்டாம் தேதிக்கும் 60 டிஎம்சி நீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நமக்கு அவ்வளவு கிடைக்கவில்லை. ஒழுங்கு முறை குழு சொல்வதே ஆறேகால் டிஎம்சி தண்ணீர் தான். ஆனால் கர்நாடகா அதிலும் இரண்டரை டிஎம்சி தான் கொடுக்கிறார்கள். தர வேண்டியது 60 டிஎம்சி  தந்திருப்பது இரண்டே கால் டிஎம்சி. இதற்கு உச்சநீதிமன்றம் தான் ஒரே வழி. உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இல்லை என்றால் குறுவை சாகுபடி நிச்சயமாக மிகப்பெரிய நஷ்டமாகும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்