Skip to main content

ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; மர்மம் நிறைந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தாசில்தார் ஆய்வு

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

Tahsildar study at the mysterious Anbu Jyoti Ashram

 

விழுப்புரத்தில் மூடப்பட்ட அன்பு ஜோதி ஆசிரமத்தில் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூர் எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு ஜோதி என்ற மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜபருல்லா என்பவர் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

 

விசாரணையின் அடிப்படையில் கடந்த பத்தாம் தேதி காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 142 பேரை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். அதில் 109 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள், ஒரு குழந்தை. விசாரணையின் அடுத்தடுத்த கட்டமாக பல்வேறு தகவல்கள் வெளியாயின. முறையாக அனுமதி பெறாமல் காப்பகம் நடந்து வந்ததும், அதேபோல் அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சங்கிலியில் கட்டிப்போட்டு பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் உரிமையாளர் ஜூபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு இடையே நேற்று மாலை அன்பு ஜோதி ஆசிரமம் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது விக்கிரவாண்டி தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரமத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்