![tablet](http://image.nakkheeran.in/cdn/farfuture/i4p_EjPMwYuOa0TTHjAe7_kkASd_dkCDiqnrBqJBB8M/1533347682/sites/default/files/inline-images/tablet.jpg)
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மலம்பட்டி அருகே உள்ள தச்சமலை வனப்பகுதியில் கடந்த மாதம் (மே) 29-ந் தேதி பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 47) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது, இறந்த பெண் திண்டுக்கல் தொட்டனூத்து பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (35) என்றும், ஏற்கனவே 2 திருமணங்கள் நடைபெற்ற நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்ததோடு சிலருடன் கள்ளத் தொடர்பிலும் இருந்துள்ளார். கடைசியாகத்தான் முருகனுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 27-ந் தேதி மலர்கொடி முருகனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதையடுத்து முருகன் இருவரும் வெளியில் செல்லலாம் என்று கூறி துவரங்குறிச்சி அருகே உள்ள பச்சமலை வனப்பகுதிக்கு அழைத்து வந்து இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர். முருகன் அதிக செக்ஸ் மாத்திரை கொடுத்ததால் அதை சாப்பிட்ட மலர்கொடி சற்று மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இதையறிந்த முருகன் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்து அவரின் முகத்தில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்து மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.