Skip to main content

“எங்க அப்பா அப்படி, தாத்தா இப்படின்றதை எல்லாம் வீட்டோட வச்சுக்கணும்” - எஸ்.வி. சேகருக்கு அண்ணாமலை பதிலடி

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

S.V. Annamalai reply to Shekhar

 

பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து விமரிச்சித்து வருவதோடு, பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் கூட அவரை கடுமையாக சாடி வருகிறார். இதையடுத்து சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு அண்ணாமலை குறித்து தொடர்ந்து எதிர்க் கருத்து வெளியிட்டு வருவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரி அளித்திருந்தார். 

 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம்  இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நான் யாருக்கும் விரோதி இல்லை. என்னைப் பிடிக்கவில்லை என்றால் தாராளமாக டெல்லிக்குச் செல்லுங்கள். இண்டிகோ விமானத்தில் 6000 ரூபாய்தான் டிக்கெட், உங்களால் முடியவில்லை என்றால் நாங்கள் டிக்கெட் போட்டுத் தருகிறோம். பழைய பஞ்சாங்கத்தை வைத்து யாராவது கட்டுப்படுத்தலாம் என்று நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன், அதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். நான் எல்லாரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய மனிதன். எங்கிட்ட வந்து நாங்க அந்த காலத்தில் அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம், எங்க அப்பா அப்படி இருந்தாரு, எங்க தாத்தா இப்படி இருந்தாரு என்பதெல்லாம் உங்க வீட்டோட வைத்துக்கொள்ளுங்கள். இது எஸ்.வி சேகருக்கு மட்டுமல்ல, அவர் கூட இருக்கும் அனைவருக்கும் தான். உங்கள் பழம்பெருமை கதையெல்லாம் எங்கிட்ட சொல்லிக் கட்டுப்படுத்த முடியாது. வேண்டும் என்றால் டெல்லி போங்க, பேசுங்க என்னைத் தூக்குவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். 

 

கட்சியிலேயே சிலர் பழம்பெருமை பேசுகிறார்கள். பாஜக தனி நபர்களுக்குச் சொந்தமானது இல்லை. எல்லாருக்குமான கட்சிதான். இது ஒரு காட்டாற்று வெள்ளம், ஒருத்தரோ அல்லது இரண்டு பேரோ கட்டுப்படுத்த முடியாது. அண்ணாமலையைப் பொறுத்த வரை இப்படிதான் இருப்பேன். உங்களால் முடிந்ததை பாரத்துக்கோங்க. தலைவராக இருந்தாலும், இப்படிதான், தொண்டனாக இருந்தாலும் இப்படித்தான் அண்ணாமலை இருப்பான். எனக்குக் கொஞ்சம் திமிரு அதிகம். வீட்டுக்குப் போய் மாட்டப் பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன், ஆட்டை பிடித்தாலும் இப்படித்தான் இருப்பேன், தலைவனானாலும் இப்படித்தான் இருப்பேன். ஆக அண்ணாமலை தலைவனானதால் நாங்கள் சொல்லும்படித்தான் கேட்க வேண்டும் என்றால், என்னால் அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது. தொண்டர்களுக்காகவும், கட்சிக்காகவும் இருக்கும் தலைவன் நான், என்னிடம் இதுபோன்ற வேலைகளெல்லாம் நடக்காது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்