1998-ம் ஆண்டு கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாரய விற்பனையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது பேருந்துகள் மீது கல்வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பை அளித்திருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்திருந்தார் அதில், தனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனையை மட்டும் நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.