
சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதா. அதன் பிறகு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் தற்பொழுது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ராதா மீதும் அவரது மகன் தருண் மீதும் பிரான்சிஸ் ரிச்சர்ட் என்ற இளைஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் தம்மை ராதாவும் அவருடைய மகன் தருணும் தாக்கியதாக புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இளைஞர் பிரான்சிஸ் ரிச்சர்டை ராதாவும் அவருடைய மகனும் தாக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ராதாவை கிண்டல் அடித்ததாக ரிச்சர்ட் மீது ஏற்கெனவே வழக்கு நிலவில் உள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.