கோடை வெப்பம் காரணமாக 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க அரசுப் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் முன் எப்போதும் இல்லாத வகையில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கலை எட்டு மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பிற்பகலில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைக் கடந்து வீசி வருகிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் கலை 11 மணிக்கு மேல் வெளியே செல்வதைக் குறைத்துக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். இது ஒரு புறம் இருக்க பள்ளி மாணவர்கள் இந்த வெயிலின் உக்கிரத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் எனத் தொடர் கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.