வரும் 19.5.2019ல் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களை அதிமுக தலைமை இன்று அறிவித்தது. அரவக்குறிச்சியில் செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி, சூலூரில் வி.பி.கந்தசாமி, ஒட்டப்பிடாரத்தில் பெ.மோகன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

பெயர்: வி.பி.கந்தசாமி
பிறந்த தேதி : 10.5.59
வயது : 62
அப்பா பெயர் : பழனிச்சாமி கவுண்டர்
முகவரி: 1/400 கோவில் தோட்டம், வி.வடுகபாளையம்,வதம்பசேரி போஸ்ட்,
சூலூர் தாலுகா, கோவை மாவட்டம்
படிப்பு : பி.ஏ.
பதவிகள் :
1996 - 2006 வதம்பசேரி ஊராட்சி மன்ற தலைவர் (2006 முதல் 2016 வரை அவரது மனைவி ராஜாமணி ஊராட்சி மன்ற தலைவர்)
மகன் : பிரபுராம் வழக்கறிஞர்
மகள் : சொவர்ணபிரியா
பதவி : கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
வி.வடுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், இறந்த முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமியின் சித்தப்பா மகன் .. ( உடன் பிறந்த சகோதரர் கிடையாது - சித்தப்பா மகன்)