Published on 23/08/2018 | Edited on 23/08/2018

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதியாகி விட்டது. தமிழக பாஜக தற்போது ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவிட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும். ரஜினிகாந்த், கமல்ஹாசன் பின்னால் சென்றால் பா.ஜ.க வுக்கு ஓட்டு கிடைக்காது என கூறினார்.