Published on 27/03/2019 | Edited on 27/03/2019
புதுச்சேரி பல்கலைகழகத்தின் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியும், திரும்பப் பெற கோரி மாணவ, மாணவிகள் போராட்ட நடத்தினர்.
பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவை, இந்திய மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ், அம்பேத்கர் மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, அம்பேத்கர் பெரியார் மாணவர் கழகம் உள்ளிட்ட 7- க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் பல்கலைக்கழகத்தில் பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.