Published on 31/07/2024 | Edited on 31/07/2024

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குறிஞ்சிநகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதன் காரணமாக பள்ளியின் வாகனம் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றி செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வந்த பள்ளி வாகனம் பழுதாகி நின்றது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் இறக்கி பள்ளி வாகனத்தை தள்ளச் செய்த சம்பவம் நிகழ்ந்தேறியது. அதனை அருகே இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.