சுருக்குமடி வலைக்கு அனுமதிகோரி நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களின் மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் உண்ணாவிரத போராட்டத்தால் விசைப்படகுகள், பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983- ல் உள்ள 21 விதிகளை முழுமையாக அமல்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தில் உள்ள விதிகள் என்ன? என்பது குறித்துப் பார்ப்போம்!
அரசால் தடைச் செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, சுத்து வலை, பேந்த வலை போன்றவைப் பயன்படுத்தக்க்கூடாது.
அனுமதிக்கப்பட்டத் தளத்தில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும்; ஆற்று முகத்துவாரத்தில் மீன் பிடிக்கக் கூடாது.
இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி விசைப்படகை கொண்டு மீன்படி தொழிலில் ஈடுபடக் கூடாது எனவும் விதி.
24 அடி கொண்ட விசைப்படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உள்பட 21 விதிகள் சட்டத்தில் உள்ளன.