பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் தீயாகப்பற்றிக் கொண்டிருக்கிறது. அந்தவழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடுமுழுவதும் மாணவர்கள் மத்தியில் போராட்டம் வெடிக்க துவங்கியிருக்கிறது.
தமிழகத்தையே உறையவைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நாகையில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அனைவரையும் கைது செய்யவேண்டும்.காவல்துறையினர் பாரபட்சமின்றி குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகே அதிக வன்கொடுமைகளும், வழிபறிக்கொள்ளைகளும், கற்பழிப்புகளும், கொலைகளும், கந்துவட்டிகொடுமைகளும், அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தனிமனித சுதந்திரமும், பெண்களுக்கான சுதந்திரமும், முற்றிலுமாக சிதைந்து விட்டது. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்திட வேண்டும். பொள்ளாச்சி விவகாரத்தில் தமிழக அரசு குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கவேண்டும்." என கோரிக்கைமுழக்கமிட்டனர்.