கோவையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி
அனிதாவுக்கு அஞ்சலி
கோவை சிவானந்தா காலனியில் மாணவி அனிதா மரணத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
நீட் தேர்வு காரணமாக மருத்துவ வாய்ப்பு பறிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அது முதல் தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும், அரசியல் கட்சியினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஓரு பகுதியாக கோவை சிவானந்தா காலனியில் இளைஞர்களும், மாணவர்களும் மாணவி அனிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மாணவர்கள் யாரும் இனிமேல் இது போன்று தற்கொலை செய்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடந்தப்படுவதாக இதில் கலந்து கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர். இதே போன்று பல்வேறு இடங்களிலும் மாணவர்களும், இளைஞர்களும் அஞ்சலி நிகழ்ச்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்த இளைஞர்கள், தமிழகத்தில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும், நீட் தேர்விற்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.
- அருள்