நீட் தேர்வில் தேர்விற்கு வந்த மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் சோதனை என்ற பெயரில் மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது மற்றும் தேர்வு எழுதச்சென்ற மாணவனின் தந்தை உயிரிழப்பு போன்ற சம்பவங்களை எதிர்த்து இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் சென்னை திருமங்கலத்திலுள்ள சிபிஎஸ்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இன்று சிபிஎஸ்சி அலுவலகம் நோக்கி சென்றனர்.
முற்றுகை போராட்டம் பற்றி செய்தியறிந்த போலீசார் சிபிஎஸ்சி அலுவலகத்திற்கு செல்லும் சாலையிலேயே தடுப்புகளை வைத்து போராட்டக்களர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் தாங்கள் அலுவகத்தின் முன் சென்று தங்களின் போராட்டத்தை நடத்தவேண்டும் என கேட்க போலீசார் மறுத்ததால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்தும் சிபிஎஸ்சியை எதிர்த்தும் பல கோஷங்களை எழுப்பினர். போலீசார் மாணவர்கள் இடையே நடந்த இந்த மோதலால் அங்கு பரபரபப்பு நிலவியது.
அதில் ஒரு போலீஸ்காரர் மாணவர் ஒருவரின் காலை முறிக்கும்படியாக தாக்கினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் சத்தம் போட்டதும், அந்த போலீஸ்காரர் அங்கிருந்து தப்பினார். மற்ற போலீஸ்காரர்கள் அவரை தப்பவிட்டனர். போராட்டம் நடத்தியவர்களை காலை முறிக்கும் அளவுக்கு கடுமையாக தாக்க உத்தரவிட்டது யார் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி மேல் கேட்க போலீசார் அதற்கு பதில் சொல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச்சென்று கைது செய்தது.