Published on 23/11/2019 | Edited on 24/11/2019
திருச்சியில் தமுமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், டிசம்பர்-6 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், சிறுபான்மை சமுதாயத்தின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் அநீதியாளர்களை கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் "உரிமை மீட்பு போராட்டம்" நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமுமுக தலைமையகம் அறிவித்துள்ளது.