வடக்கு வீதி தலைமை தபால் நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் ஏழு மாத காலமாக போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வலியுறுத்தி ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கற்பனை செல்வம், மாவட்ட துணைத்தலைவர்கள் சதானந்தம், மூர்த்தி, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கொளஞ்சி, ஜீவா குமராட்சி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தலைவர் முனுசாமி, புவனகிரி ஒன்றிய செயலாளர் காளி கோவிந்தராஜன், ராஜமதிநிறைசெல்வன் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் தர்மதுரை, சிவனேசன்.
கான்சாகிப் வாய்க்கால் சங்கத்தின் சார்பில் செயலாளர் கண்ணன், ஹாஜாமைதீன்,காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மதிவாணன், இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் சங்க மகேஸ்வரன், வாசன், உதயகுமார்உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்களை எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.