அம்ருத் திட்டத்தை விரைந்து செயல்பட தமிழக அரசுக்கு உத்தரவு
மத்திய அரசின், 'அம்ருத்' திட்டங்களை, 2018 மார்ச்சுக்குள் முடிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும், 500 நகரங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 'அம்ருத்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், தமிழகத்தில், 32 நகரங்களில், அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. இப்பணி நிலவரம் குறித்து, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் குழு, சென்னை வந்து ஆய்வு செய்தது. பின், தன் அறிக்கையை, மத்திய அரசுக்கு அளித்தது. அதனடிப்படையில், தமிழக அரசுக்கு, சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டத்தில், தமிழகத்தில், 152 கோடி ரூபாய் செலவில், 178 வகையான பணிகள் நடக்கின்றன. அவற்றை, 2018 மார்ச்சுக்குள் முடிக்க, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதில், 51 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.