ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும், பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தாமிர உருக்காலை தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு விவகாரத்துக்குத்தான் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்சனையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை இல்லை. மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும் என அவர் கூறினார்.
என் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம். ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும்? காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.