தமிழகம் முழுவதும் 41 சார்பதிவு அலுவலகங்களில்
ஆன்லைன் மூலம் பத்திர பதிவு தொடக்கம்
தமிழகம் முழுவதும் 41 சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைனில் பத்திரம் பதிவு செய்யும் பணி தொடங்கியது. தமிழகத்தில் 578 சார்பதிவு அலுவலகத்திலும் எங்கிருந்தும் பத்திரம் பதிவு செய்து கொள்ளும் வகையில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் பெரம்பலூர், நாகை உட்பட 9 சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் 41 சார்பதிவு அலுவலகங்களில் ஆன்லைன் முறையில் பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. 50 சார்பதிவு அலுவலகங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் பத்திர பதிவுக்காக வெகு நேரம் காத்திருப்பது, அலுவலக நடைமுறைகளில் ஏற்படும் கால தாமதம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்காது. இதன் மூலம் போலி ஆவணங்கள் பதிவாவது மற்றும் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது. தற்போது, எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதியலாம். சம்பந்தப்பட்டவர்கள் இதர ஆவணங்கள் மற்றும் கையொப்பம் இடுவதற்கு மட்டும் அந்தெந்த சார்பதிவு அலுவலகத்திற்கு சென்றால் போதுமானது. இதன் மூலம் பொதுமக்கள் பத்திர பதிவு மற்றும் ஆவணங்களை வாங்க வருவதற்காக அலைய வேண்டிய அவசியம் இக்காது