முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக இந்திய குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 2018 ஆம் ஆண்டு அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் அளித்தார்.
இதுதொடர்பான செய்தி குறிப்பில், ஏழுபேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கரோனா தொற்று பரவலை தவிர்க்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தி உள்ளது. எனவே 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என 9-9-2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு விடுதலை செய்ய ஆணையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.