சேலத்திற்கு, மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜன. 18ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.
இதையொட்டி, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தீவட்டிப்பட்டியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு, சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே உள்ள குரும்பப்பட்டியில் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக சேலம் வருகை தர உள்ள அவருக்கு, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் காலை 10 மணிக்கு மத்திய மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதில், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, பேரூர், கோட்ட, ஊராட்சி கிளைக்கழகம் சார்பில், அனைத்து அணிகள் சார்பிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.