Published on 23/07/2019 | Edited on 23/07/2019
நெல்லையில் முன்னாள் திமுக பெண் மேயர் உமாமகேஸ்வரி மற்றும் அவரது கணவர், வீட்டில் வேலை செய்யும் பணிபெண் ஆகிய 3 பேரும் இன்று மதியம் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்

அந்த அறிக்கையில், நெல்லை மாநகர முதல் பெண் மேயர் என்ற பெயரை பெற்று அந்த பதவிக்கும், எளிமைக்கும் இலக்கணமாக விளங்கியவர் உமா மகேஸ்வரி. திமுக மாவட்ட மகளிரணி தலைவரான உமா மகேஸ்வரியின் மறைவு திமுக விற்கு பேரிழப்பாகும்.

திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.