Skip to main content

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு போகாமலேயே அறிக்கைவிடுகிறார் உணவுஅமைச்சர் - டி.ஆர்.பி.ராஜா குற்றச்சாட்டு

Published on 08/10/2018 | Edited on 09/10/2018
tr

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் சிறப்பாக நடைபெறுகிறது.  இப்படி மீடியா வெளிச்சம் கிடைக்கும் இடங்களில் கூறிவருகிறார் அமைச்சர் காமராஜ். 

 

கொள்முதல் நிலையங்களுக்கு  நேரடியாக செல்லாமல் பொய்யான தகவலை கூறிவருவது வேடிக்கையாக இருக்கிறது என்கிறார் மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ.  டி.ஆர்.பி. ராஜா.

ஆய்வு செய்து உண்மையான தகவலை தொிவிக்க வேண்டும். அதோடு  தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எம்,எல்,ஏ ராஜா உள்ளிட்ட பெரும்பாலான விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலத்தடி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில்   தற்போது அறுவடை நடந்துவருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு  செல்லப்படும் நிலையில் நெல்லை கொள்முதல் செய்யப்படாமல் விவசாயிகளை  அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மன்னார்குடி அடுத்துள்ள நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலைங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை ஈரபதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி அலைக்கழிப்பதோடு, கொள்முதல் செய்யவும் தயங்குகின்றனர். 

 

கடந்த சில தினங்களாக பெய்யும் மழையில் கொள்முதல் நிலையங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முழுவதும் முளைக்க தொடங்கிவிட்டது. இதனை அறிந்த மன்னை திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று மழையால் பாதிக்கப்பட்டு முளைத்த நெல்லையும், கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்லையும் ஆய்வு மேற்கொண்டு  விவசாயிகளிடம் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தவர். " மன்னை சட்டமன்ற தொகுதியில் அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலைங்களில் கொள்முதல் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் நெல்  மூட்டைகள் மழையில் நனைந்துசேதமடைந்துள்ளது. விவசாயிகளின் நிலைமிகவும் கவலைக்கிடமாக உள்ளது.


தமிழக அரசு உடனடியாக குறுவை நெல்லை கொள்முதல் செய்யவேண்டும்.அதன் துறை அமைச்சர் காமராஜ் களத்திற்கு  செல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக தொிவித்திருப்பது ஏற்புடையதல்ல. அவர் களத்திற்கு  நேரடியாக சென்று விவசாயிகள் படும் அவலத்தை பார்த்து விட்டு பேச வேண்டும்.  ஏதோ ஒரு அறைக்குள் இருந்து கொண்டு, அதிகாரிகள் கூறும் பொய்யான தகலைை பேசுவதை தவிர்க்க வேண்டும் ." என்றார்.

சார்ந்த செய்திகள்