Skip to main content

பேருந்து போக்குவரத்து தொடங்குவது பற்றி அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

gh

 

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்துவருகிறது. இதன் காரணமாக பல்வேறு தளர்வுகளை மாநில அரசு வழங்கியுள்ளது. மளிகை, காய்கறி மற்றும் குறிப்பிட்ட தனிநபர் கடைகள் திறப்புக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு, மாலை 5 மணிவரை அந்தக் கடைகள் அனைத்தும் செயல்பட்டுவருகிறது. ஆனால், கோயில்கள் திறப்பு மற்றும் பேருந்து சேவைகளுக்குத் தமிழ்நாடு அரசின் தடை தொடர்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பேருந்து சேவை தொடங்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அடுத்தகட்ட தளர்வுகள் அறிவிக்கும்போது பொதுபோக்குவரத்து குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்