மயிலாப்பூர் கோவிலில் மாற்றப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக அறநிலையத்துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த நிலையில், ஆவணங்கள் அழிந்துவிட்டது என அறநிலைத்துறை அதிகாரிகள் கூறுவதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆவணங்கள் அழிக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் தரப்பில் சிலை திருட்டு வழக்குகள் தொடர்பான 50 ஆவணங்களை சிலைகடத்தல் தடுப்பு பிரிவிடம் இன்னும் போலீசார் ஒப்படைக்கவில்லை என புகார் செய்யப்பட்டது. இதனை அடுத்து சிலை திருட்டு வழக்குகள் தொடர்பான 50 ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது
மேலும் தொடர்ந்து மயிலாப்பூர் கோவில் சிலை கடத்தல் வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.