Published on 10/12/2018 | Edited on 10/12/2018
தி.மு.க. தலைவரும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , டெல்லி மாநில முதலமைச்சரும் – ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை புதுடெல்லியில், நேரில் சந்தித்து வருகிற டிசம்பர் 16ஆம் தேதி அன்று சென்னையில் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழாக்கான அழைப்பிதழை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி, எம்.பி., கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, ஆகியோர் உடனிருந்தனர்.