“தீவிர ஆன்மீகவாதிபோல பலநாள் வேடமிட்டு போவேன். பிறகு நிதானமாக ஸ்கெட்ச் போட்டு சிலைகளை கடத்தினேன்’’ என்கிறார் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் 80 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய கோயில் சிலைகளை திருடி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கைதாகியிருக்கும் ஜெயக்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள சிவன், பார்வதியின் ஐம்பொன் சிலைகள் 2015ம் ஆண்டு கானாமல் போனது. அதேபோல் வேலூர் மாவட்டம் சவுந்தரியாபுர கேசவ பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர், ஷீதேவி, பூமிதேவி ஆகிய மூன்று சிலைகள் அதே 2015ம் ஆண்டு திருடுபோனது. அதே ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த பையூரில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயிலில் உள்ள உற்சவர், ஷீதேவி, பூமாதேவி, சக்கரத்தாழ்வார் என நான்கு ஐம்பொண் சிலைகள் திருடுபோனது. மூன்று கோயில்களில் திருடுபோன சிலைகளின் மதிப்பு 80 கோடியை தாண்டும் என மதிப்பிட்டனர்.
இந்தநிலையில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த தனலிங்கம் என்பவரிடம் இந்த சிலைகள் இருப்பதாக கண்டுபிடித்து மீட்டனர். தனலிங்கத்தின் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்ததில் 16 பேர் தொடர்பிருப்பதாக வழக்கு பதிவு செய்து 15 பேரை கைது செய்தனர். மீதமுள்ள ஒருவனான சென்னை புழல்பகுதியை சேர்ந்த காவாங்கரை ஜெயக்குமார் மட்டும் மூன்று ஆண்டுகள் போலிஸுக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு தப்பிவந்தான். ஜெயக்குமார் தமிழகத்தில் இல்லை வெளிமாநிலங்களில் சுற்றுவதாகவும் 20 ம் தேதி சென்னைக்கு வருவதாகவும் சிலை தடுப்பு பிரிவு போலிஸார் கண்டறிந்ததுடன், சென்னைக்கு அவன் வரும்போது பிடித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
திருடியது எப்படி என்று போலிஸார் விசாரனையில் ஜெயக்குமார் கூறுகையில், “சாதாரண ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்தேன். அந்த தொழிலில் லாபம் பெருசாக இல்லை. 2015ம் ஆண்டு என்னுடைய நண்பர்களிடம் நான்கு நாள் ஆலோசனை செய்தேன். அவர்களையும் சேர்த்துக்கொண்டேன். அந்த டீமுக்கு நான் தலைவன். பகல் நேரத்தில் காவிவேட்டி கட்டிக்கொண்டு தீவிர ஆன்மீகவாதிபோல் பயபக்தியுடன் அங்குள்ள அர்ச்சகர்கள், பூசாரிகளிடம் பழகுவேன். பிறகு நட்பாக்கி கொள்வேன். அவர்கள் மூலமே விலை உயர்ந்த விக்கிரகங்கள் எங்குள்ளது என தெரிந்துகொள்வேன். அதை நன்பர்களோடு இரவு நேரங்களில் கடத்துவோம், திருடிய சிலைகளை சென்னையை சேர்ந்த தனலிங்கம் மூலம் விற்போம். அப்படி சில சிலைகளை விற்க சென்றபோது தான் அவர் மாட்டிக்கொண்டு எங்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்.’’ என்றானாம் கூலாக.