திருச்சி கல்லூரிகளில் மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு போராட்டம்
அனிதா மரணத்திற்கு பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகள் கல்லூரியை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஆர்பாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறையே எல்லாம் கல்லூரிக்கும் யாரும் வெளியே வந்து விட கூடாது என்று பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள்.
அதையும் மீறியும் புனித ஜோசப் கல்லூரி மாணவர்கள் தீடீர் என நுழைவாயிலில் அனைத்து வகுப்பு மாணவர்கள் வெளியே வந்து நீட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். கோட்டை காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பிறகு மாணவர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
இதே போல திருச்சி ஈவே.ரா. கல்லூரியிலும் மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கைகளில் பதாகைகள் ஏந்தி புல்வெளிகளில் அமர்ந்து நீட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
துவாக்கு அரசுக்கல்லூரியிலும் மாணவிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
-ஜெ.டி.ஆர்