நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் கற்பனைச்செல்வம், சதானந்தம் முன்னிலை வகித்தனர். கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சையதுசகாப், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன்,கோவிந்தராஜ்,செல்லையா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அனிதா சாவுக்கு நீதி கேட்டும், விவசாயிகளுக்கு வழங்கும் காப்பீட்டு தொகையை கடனில் வரவு வைப்பதை கண்டித்தும், வறட்சி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும், நீட் தேர்வை அமுல்படுத்திய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
- காளிதாஸ்