தி.மலை.யில் எதிர்கட்சிகளின் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
திமுக மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் இன்று திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரம் பேராவர்.
இதில் சிறப்புரை ஆற்றிய திமுக மா.செவும், எம்.எல்.ஏவுமான எ.வ.வேலு, நீட்டால் நம் பிள்ளைகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. சமூக நீதியே பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மருத்துவத்துக்கு நீட் கொண்டு வந்த மத்தியரசு நாளை பொறியியல், கலை அறிவியல் படிப்புக்கும் நீட் கொண்டு வரும். அரியலூர் மாணவி அனிதா இறக்க காரணம் மத்திய பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் மைனாரிட்டி கட்சியான அதிமுக அமைச்சர்கள் தான். இவர்கள் தான் நம்பவைத்து ஏமாற்றினார்கள். இந்த ஆட்சியை அகற்ற சில நாட்கள் தான் உள்ளது. பொருத்திருந்து பாருங்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும் என்றார்.
-ராஜா